Saturday, December 13, 2025 4:05 pm
இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழப்பதாக இந்திய நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆண்டுதோறும் இந்தியாவில் 2 முதல் 2.5 லட்சம் மக்கள் புதிதாக நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள், இது உலகளவில் 840 மில்லியன் மக்களை பாதிக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும் .
மேலும் , இந்தியாவில் 7 கோடி மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோயோடு வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீரிழிவு நோய் , இரத்த அழுத்தம் , புகை பிடித்தல் , மது அருந்துதல் , சிறுநீரக தொற்றுகள் , சிறுநீரக கற்கள் , உடற்பருமன் , காசநோய் , வலி நிவாரணி மாத்திரைகளின் பக்க விளைவு , உணவு நச்சுக்கள் , புற்றுநோய் போன்றவை சிறுநீரகம் பாதிப்பதற்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன.
மேலும் இது மரணத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்தத் தரவுகள் சிறுநீரக செயலிழப்பின் தீவிரத்தைக் காட்டுகின்றன, இது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.
இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சிறுநீரகம் தொடர்பான நோய்களின் உலகளாவிய அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 10 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படலாம் என மதிப்பிட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டளவில், சிறுநீரக நோய்கள் உலகளவில் மரணத்திற்கு ஐந்தாவது முக்கிய காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் கணித்துள்ளது.
எனவே சிறுநீரகங்களை பாதுகாப்பதற்காக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

