இளம் வயதில் சர்வதேச அணியை வழிநடத்திய வீரர் என்ற சாதனையை, குரோஷியா அணியின் 17 வயதான ஜாக் உகுசிச் படைத்துள்ளார்.
குரோஷியா- சைப்ரஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியின் போது அவர் குரோஷியா அணியின் தலைவராக அறிமுகமானார்.
முன்னதாக 2022ஆம் ஆண்டு நோமன் அம்ஜத் தனது 18 வயதில் பிரான்ஸ் அணியின் தலைவராகச் செயற்பட்டதே சாதனையாக இருந்தது.
குறித்த சாதனையை ஜாக் உகுசிச் தற்போது முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.