பாதுகாப்புக்காக பொது மக்களுக்கு வழங்கப்பட்ட
1,697 துப்பாக்கிகள் திரும்பப்பறப்பட்டதாகவும், 33 துப்பாக்கிகள் இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கர்னல் நலின் ஹெராத் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களில் பலர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால்தான் தாமதம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஒப்படைக்கப்படாத ள 33 ஆயுதங்களுக்கு சலுகை காலம் வழங்கப்படுமா என்பதை அமைச்சு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இணங்கத் தவறினால் துப்பாக்கி உரிமங்கள் நிரந்தரமாக இரத்து செய்யப்படலாம் மற்றும் சாத்தியமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று முந்தைய சுற்றறிக்கைகள் குறிப்பிடுகின்றன.