Tuesday, December 9, 2025 1:58 pm
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளது.
அபாயமுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் கட்டாயமாக அந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 4 மாவட்டங்களைச் சேர்ந்த 41 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

