Monday, January 26, 2026 11:39 am
பிலிப்பைன்ஸின் பசிலன் மாகாணத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 15பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 350க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகே விபத்துக்குள்ளானது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தில் 316 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
படகு கவிழ்ந்ததிற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும், படகு புறப்படுவதற்கு முன்னர் முறையான ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதிகப்படியான பயணிகள் ஏற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

