பாகிஸ்தான் , பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையே 15 ஆண்டுகளின் பின்னர் வெளியுறவுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இத்ந்ற்காக பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலாளர் டாக்காவிற்கு சென்றுள்ளார்.
பாகிஸ்தான் சார்பாக அங்கு சென்றுள்ள அம்னா பலோச், வெளியுறவு அலுவலக ஆலோசனை (FOC) செயல்முறையின் ஒரு பகுதியாக, பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர் முகமது ஜாஷிம் உதீனை சந்திக்கிறார்.
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது, குறிப்பாக தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் கீழ் உள்ள பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் இந்தியாவிலிருந்து விலகி பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அதிக ஈடுபாடு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இது முக்கிய கவனம் பெற்றுள்ளது.
பங்களாதேஷில் செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட பாகிஸ்தானின் பரந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவும் இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை