இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ஆம் திகதி இலங்கை வந்தடைந்தார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவை பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் மோடி கலந்துரையாடல் மேற்கொண்டார்.
மீனவர்களை விடுவிப்பது மற்றும் அவர்களின் படகுகளை திருப்பி அனுப்புவது குறித்தும் இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.