பல்வேறு தரப்பினரிடமிருந்து 14 மில்லியன் ரூபா இலஞ்சம் வசூலித்ததற்காக, பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் இயக்குநர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
காலி , எம்பிலிப்பிட்டி ஆகிய பிரிவுகளுக்குப் பொறுப்பாக இருந்தபோது அவர் இஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு ஆணையம் கூறியது.
எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே மற்றொரு நபரின் பெயரைப் பயன்படுத்தி மூன்று வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குற்றவாளிகள், பொலிஸ் தொடர்பான சேவைகளுக்கு வரும் நபர்கள் , பிற குற்றவாளிகளிடமிருந்து பெறப்பட்ட இலஞ்சங்களை மூன்று வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.