Wednesday, June 11, 2025 9:53 am
 ஆர்ஜென்ரீனாவின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் பதவியில் இருந்த காலத்தில் பொதுப்பணி ஒப்பந்தங்களில் முறைகேடுகள் செய்ததற்காக அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை ஆர்ஜென்ரீனாவின் உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று உறுதி செய்தது.
கீழ் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக பெர்னாண்டஸின் சட்டக் குழு தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது, சிறைத்தண்டனையுடன் பொது பதவியில் அவருக்கு வாழ்நாள் தடை இரண்டையும் உறுதிப்படுத்தியது.
 

