அமெரிக்காவில் மிசிசிப்பி ஆற்றின் மேற்கே ஒரு காலத்தில் மிகப்பெரிய நன்னீர் நீர்நிலையாக இருந்த துலாரே ஏரி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வறண்டு கிடந்த பின்னர் ,கலிபோர்னியாவின் சான் ஜோவாகின் பள்ளத்தாக்கில் வியத்தகு முறையில் தற்போது மீண்டும் திரும்பியுள்ளது.
ஒரு காலத்தில் இந்த ஏரியை ஒட்டி வசித்து வந்த பூர்வீக டாச்சி யோகுட் பழங்குடியினர் இதை பா’ஷி என்று அழைத்தனர்.
அவர்களுக்கு ஒரு முக்கிய நீர் ஆதாரமாகவும், பேக்கர்ஸ்ஃபீல்ட் , சான் பிரான்சிஸ்கோ இடையே நீராவி கப்பல் பயணத்தின் மையமாகவும் இருந்த இந்த ஏரி, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆக்கிரமிப்பு நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்திற்கான நில மறுஉருவாக்கம் காரணமாக காணாமல் போனது.
2023 ஆம் ஆண்டில் ஏரியின் எதிர்பாராத மறுஉருவாக்கம், தொடர்ச்சியான வளிமண்டல ஆறுகள் , சியரா நெவாடா மலைகளில் இருந்து கணிசமான பனி உருகுதல் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நீர் திசைதிருப்பலை தற்காலிகமாக மாற்றியது. இந்த நிகழ்வு விவசாய நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து உள்ளூர் விவசாயிகளைப் பாதித்துள்ளது.