Monday, December 29, 2025 10:41 am
மெக்சிகோவின் ஓக்ஸாக்கா (Oaxaca) பகுதியில் புகையிரத விபத்து இடம்பெற்றுள்ளது.
பசிபிக் மற்றும் வளைகுடா பகுதிகளை இணைக்கும் இந்தத் புகையிரத தடம் புரண்டதில் குறைந்தது 13 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்புப் பணிகள் மற்றும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க மெக்சிகோ அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த இண்டர் ஓசியானிக் (Inter oceanic) புகையிரத திட்டம் நாட்டின் மிக முக்கியமான வர்த்தக வழித்தடமாக கருதப்படுகிறது.

