Wednesday, November 19, 2025 3:19 pm
லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் படைகள் குவிக்கப்பட்டிருக்கும் லெபனானின் தெற்கு பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்து வருகின்றது.

