Tuesday, December 9, 2025 2:19 pm
எதிர்வரும் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு 12 இலங்கை வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) இன்று வெளியிட்ட 2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL2026) ஏலத்தின் வீரர்களின் இறுதிப் பட்டியலில் மொத்தம் 12 இலங்கை நட்சத்திரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷன, பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், முன்னாள் தலைவர் தசுன் ஷனக, சரித் அசலங்க, துனித் வெல்லலகே, குசல் பெரேரா, டிராவீன் மேத்யூ, இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் அடங்குகின்றனர்.
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 2:30) ஏல நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
ஏலத்தின் போது பத்து அணிகளும் 77 இடங்களை நிரப்ப வேண்டும்இ அவற்றில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

