Tuesday, November 11, 2025 3:56 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள, நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 12 பொது மக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று ஏஎப்பி செய்தி நிறுவனம் (AFP News Agency) தெரிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையான சட்டத்தரணிகள் ஒன்று கூடியுள்ள இடத்தில் குண்டு வெடித்தது என்றும், அது எந்த வகையான குண்டு வெடிப்பு என்று தற்போதைக்கு கூற முடியாது எனவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு இடம்பெற்ற பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இரத்தக் கறைகள் படிந்துள்ளதாகவும், குறித்த பிரதேசம் புகைமண்டலாக இருந்தது என்றும் நேரில் கண்டவர்கள் கூறியதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


