க.பொத.சாதாரண தரப் பரீட்சை வெளியாகிய நிலையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் 117 வருடங்களிற்குப் பின்னர் முதல்முறை மாணவி ஒருவர் 9A சித்தியைப் பெற்றுள்ளார்.
மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கல்விகற்று வந்த ஜெகதீஸ்வரன் நிரோஜா என்ற மாணவியே 9A பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
கிராமப்புறத்தில் உள்ள மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம் பல காலங்களாக பொருளாதாரம் குன்றிய நிலையில் காணப்பட்டு வருகின்ற நிலையிலேயே குறித்த மாணவி 9A சித்தியைப் பெற்றுள்ளார்.
பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டு 117 வருடங்கள் ஆகின்ற நிலையில் பாடசாலை வரலாற்றில் குறித்த மாணவி இந்த சாதனையைப் பெற்றுள்ளார்.
மாணவியின் சாதனையை நேர்காணல் செய்த போது அவர் தெரிவிக்கையில்,
ஆரம்பக்கல்வி முதல் இற்றை வரையான கற்கையை மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்று வந்தேன். எனது கல்விக்கு முற்றுமுழுதான ஆதரவை முதலில் பெற்றோர் வழங்கினர். அதைத் தொடர்ந்து பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களும் அதிபர்களும் சக நண்பர்களும் மிகப் பெரும் ஆதரவு வழங்கினர்.
பாடசாலையில் குறிப்பிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாதிருந்த போதும் எனது சுயகற்றல் மூலம் நான் இந்தப் பெறுபேற்றைப் பெற்றுள்ளேன். எந்தவொரு தனியார் கல்விநிலையங்களுக்கும் செல்லாமல் பாடசாலையிலும் எனது சுயகற்றலிலும் மட்டுமே கற்று இந்தப் பெறுபேற்றைப் பெற்றுள்ளேன் என தெரிவித்தார்.
Trending
- நாட்டில் 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களில் 6 பேர் பலி
- கைதானவர்களை அழைத்துவர இந்தோனேசியா சென்ற விசேட பொலிஸ் குழு
- செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
- வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினம் : யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
- சாவகச்சேரியில் இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி
- ஈட்டி எறிதலில் லெகாம்கேவிற்கு தங்கம்
- பருத்தித்துறை பிரதேச சபை ஏல்லைக்குள் பொலித்தீனுக்குத் தடை
- காபூலில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு