Wednesday, February 19, 2025 4:00 pm
ரமழான் மாதத்தை முன்னிட்டு, சவூதி 102 நாடுகளுக்கு 700 தொன் பேரீச்சம்பழங்களை வழங்க சவூதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை 200 தொன் அதிகமாக வழங்கப்பட உள்ளது, மேலும் இந்த நனகொடைத் திட்டமானது உலகளாவிய முஸ்லிம் சமுதாயத்திற்கான சவூதி அரேபியாவின் ஆதரவையும் உதவியையும் வலுப்படுத்துகிறது.
இந்த விநியோகத்தை, சவூதி தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து இஸ்லாமிய அலுவல்கள், பிரசாரம் மற்றும் வழிகாட்டல் அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது.

