Wednesday, November 5, 2025 8:49 pm
கொழும்பின் புநகர் பகுதியான கெசல்வத்தை, கெரகானா கல்கனுவ வீதயில் உள்ள ஹோட்டல் ஒன்றில், முகநூல் (Facebook) ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இளைஞர்கள் – பெண்களை சுற்றிவளைத்த பொலிஸார், பெண் ஒருவர் உட்பட 10 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
அம்பாந்தோட்டை, தெஹிவளை, பொரலஸ்கமுவ, காலி மற்றும் கல்கிசை பிரதேசங்களைச் சேர்ந்த 25 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று கூறிய பொலிஸார், கைதான சந்தேகநபர்களிடம் இருந்து ICE மற்றும் கொக்கைன் (cocaine) போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஹோட்டலின் உரிமையாளரும் அவரது மனைவியும் அடங்குவர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த ஹோட்டலை சுற்றிவளைத்து விசாரணை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

