ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பிரீமா, செரண்டிப் நிறுவனங்கள் நேற்று திங்கட்கிழமை (17) தீர்மானித்திருந்தன.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்