Tuesday, January 6, 2026 4:22 pm
புத்தளம் மாவட்டத்தில் உள்ள வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 850 கிலோவிற்கும் அதிக நிறையுடைய சுறா மீன்களுடன் 06 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுறாமீன்கள் நீண்ட நாட்களாக மீன்பிடிப் படகொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
கடலோர பாதுகாப்புப் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீன்கள் மற்றும் மீன்பிடிப் படகுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லமன்கர மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

