ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 07.00 – 07.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவ் விபத்து இடம்பெற்றதுடன் இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்ததாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த குழுவினர் ஹொரணை மற்றும் இங்கிரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.