Wednesday, September 10, 2025 6:35 am
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆசியக்கிண்ண கிறிக்கெற் போட்டியில் ஹொங்கொங்கை எதிர்த்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 94 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து 188 ஓட்டங்கல் எடுத்தது. 189 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஹொங்கொங் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 94 ஓட்டங்கள் எடுத்தது.
ஆப்கானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான செதிகுல்லா 52 பந்துகளில் அட்டமிழக்காமல் 73 ஓட்டங்கள் எடுத்தார். முகமது நபி 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஐந்தாவது விக்கெற்றில் செதிகுல்லாவுடன் இணைந்த ஒமர்சாய் 21 பந்துகளில் அதிரடியாக 53 ஓட்டங்கள் எடுத்தார். ரஹமதுல்லா 8 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனைய நால்வரும் அதற்குக் குறைவான ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். ஹொங்கொங் வீரர்களான ஆயுஸ் சுக்லா, கின்ஷிட் ஷா ஆகிய இருவரும் தலா 2 விக்கெற்களை கைப்பற்றினர்.
ஆப்கான் வீர பாபர் ஹயட் அதிக பட்சமாக 39 ஓட்டங்கள் எடுத்தார். ஹொங்கொங் அணித் தலைவர் யாசிம் முர்தாசா 16 ஒட்டங்கள் எடுத்தார். ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். ஆப்கான் வீரர்களான் பரூக்கி, குல்பதின் நைப் தலா ஆகியோர் தலா 2 விக்கெற்களை வீழ்த்தினர்.
2016 ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியில் ஹொங்கொங் அணியை 66 ஒட்ட வித்தியாசத்தில் வென்றதே ஆப்கானிஸ்தானின் முந்தைய சாதனையாகும்.
ரி20 யில் 20 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக ஆப்கானின் அஸ்மத்துல்லா உமர் சாய் சாதனை படைத்தார். ஆப்கானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் செடிகுல்லா அடல் கொடுத்த மூன்று கச்களை ஹொங்கொங் வீரர்கள் தவற விட்டனர். அதே வேளை இரண்டு ரன் அவுட்களைத்தவறவிட்டனர்.
ஆட்ட நாயகன் விருதை அஹமதுல்லா உமர்சாய் பெற்றுக்கொண்டார்.

