Thursday, September 18, 2025 8:11 am
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் நடைபெறும் என பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் காமினி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய தியவடன நிலமேவின் பதவிக்காலம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளது.
அதன்படி, புதிய தியவடன நிலமேவுக்கான தேர்தலை இந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய தியவடன நிலமே இந்தப் பதவிக்கு 2005 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் 02 முறையும் அவரே தியவடன நிலமேவாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
தியவடன நிலமே ஒருவரின் பதவிக்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

