கல்பிட்டியில் நடந்த DJ பார்ட்டியில் தனது காதலனுடன் நடனமாடிக்கொண்டிருந்த 31 வயது ஸ்பானிஷ் பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாக மூன்று சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டு விளக்க மரியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி குடவா பகுதியில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர், அங்கு கல்பிட்டியின் கண்டகுலியா பகுதிக்கு தனது காதலனுடன் வந்த பெண், அருகிலுள்ள ஹோட்டலில் நடந்த DJ கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
அந்தப் பெண் தனது புகாரில், வெளிநாட்டினர் , உள்ளூர் இளைஞர்கள் இருவரும் விருந்தில் கலந்து கொண்டதாகவும், அனைவரும் இசை , நடனத்தை ரசித்துக்கொண்டிருந்ததாகவும் கூறினார். இருப்பினும், ஒரு குழு ஆண்கள் தன்னை அணுகி, தகாத முறையில் தன்னைத் தொட்டதாகவும், பின்னர் தான் எதிர்த்தபோது தன்னைத் தாக்கியதாகவும் அவர் கூறினார்.தனது இடது கண்ணுக்கு மேலே காயம் ஏற்பட்டதால், புத்தளத்தில் பொலிஸில் எழுத்துப்பூர்வ புகார் அளித்தார், மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டார்.
கல்பிட்டியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் விசாரணையின் போது கைது செய்யப்பட்டு கல்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை விளக்க அம்றியலில் வைக்கப்பட்டுள்ளனர்.