பங்களாதேஷில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை முறையாகத் தடை செய்துள்ளது.
சனிக்கிழமை (மே 10) மாலை ஆலோசகர்கள் குழுவின் அறிக்கையின் மூலம் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாட்டில் இடைக்கால அரசு உருவான பிறகு நடக்கும் அரசியல் மறுசீரமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
இந்தத் தடை அடுத்த வேலை நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் வெளியிடப்படும். ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தை கவிழ்த்த 2024 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உருவான மாணவர் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அவாமி லீக்கை தடை செய்யும் இந்த நடவடிக்கைக்கான சட்ட அடிப்படையை ஆதரிக்க, ஆலோசகர்கள் கவுன்சில் பங்களாதேஷில் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் (ஐசிடி) சட்டத்தை திருத்தியது.
இதன் மூலம், அரசியல் கட்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் மீது வழக்குத் தொடர அனுமதித்தது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவாமி லீக் தலைவர்களுக்கு எதிரான தொடர்ச்சியான விசாரணைகளில் ஈடுபடும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கும் இந்தத் தடை அவசியம் என்று முகமது யூனுஸ் அரசாங்கம் கூறியது.இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி) எந்த அரசியல் கட்சியையும் தடை செய்வது தவறு என எச்சரித்துள்ளது.
Trending
- தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்
- டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கிங் கோலி
- ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை
- ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு
- கொத்மலை விபத்தில் உயிர் பிழைத்தவர்களை பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்
- கொத்மலை பேருந்து விபத்தில் குழந்தையை காப்பாற்றிய தாயார் உயிரிழப்பு
- திபெத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
- விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மில்லியன் ரூபா இழப்பீடு