ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் புதிய தலைவராக திரு. ஷம்மி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா தொடர்ந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் பல உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திருமதி. மாலனி குணரத்ன தலைமையில், அவர் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட்டின் 64வது ஆண்டு பொதுக் கூட்டத்துடன் தேர்தல் நடைபெற்றது.