களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பாத பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 3,060 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை ஹொரணை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (6) பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கல்பாத பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.