மேற்குலகின் இசைவடிவமான சிம்பொனியை இளையராஜா உருவாக்கி இருக்கும் முன்னோட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
‘ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்திருக்கிறேன். இது எனக்கு சந்தோஷமான செய்தி’, என்று இளையராஜா குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் சிம்பொனியின் இசை பயணம் குறித்த முன்னோட்ட வீடியோ, யூ-டியூப்பில் வெளியானது. 9 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் சிம்பொனி இசையை இளையராஜா உருவாக்குவது முதல் வெளிநாட்டவர்கள் இளையராஜாவை பற்றி எடுத்துக்கூறுவது உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி படு வேகமாக வைரலாகிறது.
தளபதி படத்தின் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, மூடுபனி படத்தின் ‘என் இனிய பொன் நிலாவே’, சிவப்பு ரோஜாக்கள் படத்தின் ‘நினைவோ ஒரு பறவை’ போன்ற பாடல்களில் வரும் பின்னணி இசை ஒரு சிம்பொனி வடிவம்தான் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
இலண்டனில் மார்ச் மாதம் இளையராஜாவின் சிம்பொனி அரங்கேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு