புதிய போப் யார் என்பதை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக சிஸ்டைன் சிற்றாலயத்தில் கார்டினல் கான்கிளேவ் தொடங்கியது.
133 கார்டினல்கள் கூடிய நிலையில், போப் ஆண்டவர் தேர்வு முறையில் முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனை தெரிவிக்கும் விதமாக மரபு படி கார்டினல்கள் எழுதி வைத்திருக்கும் பேப்பர்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்பட்டது.
கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21 ஆம் திகதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். கடந்த 12 ஆண்டுகளாகப் போப் பதவியில் இருந்தவர் போப் பிரான்சிஸ் ஈஸ்டர் தினத்திற்கு மறுநாள் உயிரிழந்தார்.
புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் வெண்புகை மூலம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.
புதிய போப் ஆண்டவர் பதவிக்கான போட்டியில், இத்தாலிய கார்டினல் பியட்ரோ பரோலின், பிலிப்பைன்ஸ் கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டேகிள், ஹங்கேரிய கார்டினல் பீட்டர் எர்டோ உள்ளிட்டோர் உள்ளனர்.
இவர்களில் ஒரு கார்டினல் தேர்வாக வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. புதிய போப் யார் என்பதை அறிந்து கொள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.