அமெரிக்காவில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் 30 நாட்களுக்குள் அந்நாட்டு மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது.
இந்த உத்தரவு ஏலியன் பதிவுச் சட்டத்தின் அமலாக்கத்தின் கீழ் வருகிறது. மேலும், இது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் (DHS) கண்டிப்பாக செயல்படுத்தப்படுகிறது.
DHS இன் படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பதிவு செய்யத் தவறினால் அபராதம், சிறைத்தண்டனை மற்றும் சட்டப்பூர்வ குடியேற்ற நிலையை இழக்க நேரிடும்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினர் பதிவு செய்ய வேண்டும்” என்று எச்சரித்தது.
18 வயது ,அதற்கு மேற்பட்ட நபர்கள் உடனடியாக இணங்க வேண்டும், மேலும் சிறார்களும் 14 வயது நிரம்பியவுடன் பயோமெட்ரிக் தரவைப் பதிவுசெய்து வழங்க வேண்டும்.
கூடுதலாக, எந்தவொரு முகவரி மாற்றத்தையும் 10 நாட்களுக்குள் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று விதி கட்டளையிடுகிறது.
இணங்கத் தவறினால் $5,000 வரை அபராதம் மற்றும் 30 நாட்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.