கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.