இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக வெற்றிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெற்றிலை ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளமையால் கராச்சிக்கான வெற்றிலை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய, எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு அதிகளவான வெற்றிலை ஏற்றுமதி இடம்பெறுகிறது.வாரத்தில் இரு நாட்களுக்கு விவசாயிகளிடமிருந்து வர்த்தகர்கள் வெற்றிலையைக் கொள்வனவு செய்கின்றனர்.
, விமான சேவை நிறுத்தப்பட்டமையினால் வெற்றிலைகள் விமான நிலையத்தில் தேங்கியுள்ளதாகவும் எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
வர்த்தகர்கள் வெற்றிலைகளைக் கொள்வனவு செய்யாமையினால் உள்நாட்டுச் சந்தைக்கு வரும் வெற்றிலையின் அளவு அதிகரிக்கும் எனவும் எதிர்காலத்தில் வெற்றிலையின் விலை குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.