இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 13 வரை வீதி விபத்துகளில் 965 பேர் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துளனர். 902 பேர் விபத்துகளால் உயிரிழந்துள்ளர்.இதே காலகட்டத்தில் 1,842 கடுமையான விபத்துகள் பதிவாகியுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் , மோசமான வாகன பராமரிப்பு ஆகியவற்றால் அதிகமான விபத்துகள் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துகளைக் குறைக்க, நாடு தழுவிய அளவில் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.