வீதியை புனரமைத்து தருமாறுகோரி நானுஓயா, ரதெல்ல கீழ் பிரிவு தோட்ட மக்கள் இன்று காலை வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நானுஓயா ரதெல்ல கீழ் பிரிவு தோட்டத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இத்தோட்டத்தில் இருந்து தலவாக்கலை செல்லும் இரண்டு கிலோமீட்டர் தூரம்கொண்ட வீதி பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது. பாதையை உடனடியாக சீரமைத்து தருமாறு கோரி இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கவனீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 500 இற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அரசாங்கத்தில் 2020 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளை ஆரம்பிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. பாதையினை உடனடியாக புரனமைப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Trending
- ஈட்டி எறிதலில் லெகாம்கேவிற்கு தங்கம்
- பருத்தித்துறை பிரதேச சபை ஏல்லைக்குள் பொலித்தீனுக்குத் தடை
- காபூலில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு
- இலங்கை வங்கியின் 75வது ஆண்டு விழா ஞாபகார்த்த நாணயத்தாள் வெளியீடு
- ஐசியுவில் இருந்து வெளியேறினார் ரணில்
- 10 நாட்களுக்கு உச்சத்தில் சூரியன்
- பொலிஸ் அதிகாரியைத் தாக்கியவர் விளக்க மறியலில்
- கிழக்குக்குத் தங்கப் பதக்கம்