Monday, February 10, 2025 5:50 pm
ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் இரண்டு பழுப்பு கரடிகள், இரண்டு கழுதைப்புலிகள் ,ஆறு மீர்கட்கள் இன்று திங்கட்கிழமை [10] இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
கழுதைப்புலிகள் ரிடிகாமா சஃபாரிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், கரடிகளும், மீர்கட்டுகளும் தெஹிவளை மிருகக் காட்ட்சிச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும். அங்கு விலங்குகள் ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்தப்படும் தேசிய விலங்கியல் பூங்காத் துறை தெரிவித்துள்ளது.,

