சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா உள்ளிட்ட பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது படத்தைப் பற்றி பேசாமல் வேறு என்னென்னவோ பேசியும் சில இடக்கடக்கரலான வார்த்தைகளை வெளிப்படையாகப் பேசியும் முகம் சுளிக்க வைத்தார். அதே போல இளையராஜா பற்றி பேசும்போது அவரை ஒருமையில் பேசியிருந்தார். அது ஒரு அன்பின் வெளிப்பாடாக இருந்தாலும் மேடை நாகரிகம் கருதி அப்படி பேசியிருக்க வேண்டாம் என்ற கருத்துகளும் எழுந்தன. இதற்காக அவர் பின்னர் மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில் தற்போது அவர் நடித்துள்ள ‘டிராகன்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவரிடம் திரையில் அவரது புகைப்படத்தைக் காட்டி இவரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்கள் எனக் கேட்டனர். அதற்கு மிஷ்கின் ‘விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்’ எனக் கூறியுள்ளார்.
Trending
- வீரபத்திராசனம்
- 20 ஆவது இலக்கத்துக்கு ஓய்வு
- எரிபொருள் துண்டிக்கப்பட்டதால் விமானம் விழுந்தது
- ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
- இலங்கையும் ரஷ்யாவும் ஆழமான நட்புறவு நாடுகள்
- ஊடகங்களிடம் இருந்து ரூ. 500 மில்லியன் கோருகிறார் ஹரக் கட்டாவின் மனைவி
- இந்த ஆண்டு இதுவரை 66 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
- நடிகை வனிதா படத்தின் பாடலுக்கு எதிராக இளையராஜா முறையீடு!