Saturday, July 19, 2025 6:58 am
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த அறிவித்தலைப் புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
“விமான நிலையத்தைச் சுற்றி பட்டம் பறப்பது விமானங்களுக்கும் பயணிகளின் உயிருக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் விடப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.