ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் தலாவ பிரதேசத்தில் பாரிய விபத்துக்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றொரு வாகனத்தில் தலாவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதில் காயமடைந்தவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடுஇ குறித்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக இந்த விபத்துச் சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.