Saturday, February 28, 2026 6:22 am
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை பிரிந்து வாழ்வதால் விவாகரத்து வேண்டுமென சங்கீதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 20ம் திகதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் , அவரது மனைவி சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கடந்த சில வருடங்களாகவே கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது. ஆனால் அதை பற்றி விஜய்யோ அவரது குடும்பத்தினரோ எதுவும் இதுவரை வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் தான் இருக்கின்றனர்.
விஜய் ,சங்கீதா இருவருக்கும் திருமணம் ஆகி 27 வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆவது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள் விவாகரத்து செய்வதாக வெளியாகி இருக்கும் செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.
விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். அரசியல் மாநாடுகளில் அவரது பெற்றோர் மட்டுமே வருகின்றனர். மனைவி சங்கீதா ஒரு அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் விஜய்யை ஒரு முன்னணி நடிகை உடன் இணைத்து பாஜக தலைவர் சமீபத்தில் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

