Friday, September 26, 2025 10:00 am
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் நேற்று (25) 717 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் இதுபோன்ற குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கை எதிர்காலத்திலும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய விசேட நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றைய (25) அறிக்கை பின்வருமாறு.
பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,932.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 717.
குற்றங்கள் தொடர்பாக நேரடியாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 28.
கைது செய்யப்பட்ட பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246.
கைது செய்யப்பட்ட திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிற போக்குவரத்து குற்றங்கள் 3,747.

