நேற்றைய தினம் (24) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 1,006 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், நாடு முழுவதும் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, பிரதேச மட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய சிறப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
2025 செப்டம்பர் 24 அன்றைய அறிக்கை பின்வருமாறு:
சோதனை செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 28,669
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,006
குற்றங்கள் தொடர்பாக நேரடியாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 31
பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 378
திறந்த பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 223
குடிபோதையில் வாகனம் செலுத்தியதால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 63
கவனயீனமாக வாகனம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20
பிற போக்குவரத்து குற்றங்கள் 4,364