அழிந்து வரும் கலையான வசந்தன் கூத்தை, உயிரூட்டி வளர்க்கும் நோக்குடன் திரு. தாந்தியான் சிதம்பரப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்ட ‘வாழும் வசந்தன்’ எனும் நூல் வெளியீடு இன்று சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்ற வசந்தன் கூத்து பாடல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
தலைமை தாங்கிய திரு தாந்தியான் சிதம்பரப்பிள்ளை அவர்களே நூலையும் வெளியிட்டு வைத்தார். அவரை சமூக செயற்பாட்டாளர்களும் நலன் விரும்பிகளும் பாராட்டி கௌரவித்தனர்.




