வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் கணக்கை இணைக்கும் புதிய வசதி விரைவில் செய்து தரப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாட்ஸ் அப் என்ற சமூக வலைதள செயலியில் இன்ஸ்டாகிராம் ஐடியை இணைக்கும் புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ்அப்பில் ஒருவர் பெயர், மொபைல் எண் விவரங்கள் மட்டுமே இருக்கும் என்பதால், இந்த கணக்கை இன்ஸ்டாகிராம் கணக்குடன் இணைக்கும் வசதி தற்போது பீட்டா பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், iOS பயனர்கள் தற்போது இந்த வசதியை பெற்று வரும் நிலையில், மற்ற பயனர்களுக்கும் கொண்டுவர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய அம்சத்தால், ஒருவரிடம் வாட்ஸ் அப்எண் இருந்தாலே அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கையும் தெரிந்து கொள்ள முடியும் என்பதும், இந்த இரண்டையும் இணைக்க மெட்டா நிறுவனம் அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Trending
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!
- வீரபத்திராசனம்
- 20 ஆவது இலக்கத்துக்கு ஓய்வு
- எரிபொருள் துண்டிக்கப்பட்டதால் விமானம் விழுந்தது
- ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
- இலங்கையும் ரஷ்யாவும் ஆழமான நட்புறவு நாடுகள்
- ஊடகங்களிடம் இருந்து ரூ. 500 மில்லியன் கோருகிறார் ஹரக் கட்டாவின் மனைவி