வடமாகாண ஏற்றுமதியாளர் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு அதன் அலுவலகம் 15ம் திகதி அன்று சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. கனோஜன் அவர்களால் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர், இலங்கை மற்றும் கனடாவிற்கான துணைத்தூதுவர், பல உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
Chamber of Northern Exporters of Sri Lanka (CNE) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அமைப்பின் அலுவலகம் யாழ் கச்சேரியில் அமைந்துள்ள பழைய பனை அபிவிருத்தி சபை கட்டடத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.