வடமராட்சிகிழக்கு நாகர்கோவில் பகுதியில் காங்கேசன்துறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு நடத்திய சுற்றி வளைப்பின்போது பொலிஸாரால் இரண்டு பரல் கோடா, இருபது லீற்றர் கசிப்பு கசிப்பு தயாரிக்கும் உபகரணங்கள் என்பன இன்று மீட்கப்பட்டன
இந்த நடவடிக்கையின்போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
காங்கேசன்துறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் ,பொருட்களும் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.