Wednesday, November 5, 2025 2:54 pm
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்று காலை 9:15 இற்கு சுனாமி ஒத்திகை நடைபெற்றது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை பொலிஸ் , கடற்படை, இராணுவம், அதிரடி படை, பருத்தித்துறை மாகரசபை உட்பட பல்வேறு அமைப்புக்கள் திணைக்களங்கள் பங்குபற்றின.
சுனாமி ஒத்திகையில் வடமராட்சி மெதடிஸ்த பெண்கள கல்லூரி மாணவிகளும், சுமார் 500 க்கு மேற்பட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஒழுங்குசெய்யப்படுகின்ற பிராந்திய நாடுகளுக்கான சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது.


