வடமத்திய மாகாண வேளாண்மைத் துறை, மகா இலுப்பல்லமவில் உள்ள சேவைப் பயிற்சி நிறுவனத்தில் ஒரு அதிநவீன வாழை திசு வளர்ப்பு நடவு பொருள் உற்பத்தி ஆய்வகத்தைத் திறந்துள்ளது.
தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு ,வேளாண்மை அமைப்பு ,சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் இதுநிறுவப்பட்டது.இந்த ஆய்வகம் வடமத்திய, வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகளுக்கு உயர்தர, நோயற்ற வாழை செடிகளை வழங்கும், இது தெற்கிலிருந்து பொருட்களை கொண்டு செல்ல வேண்டிய தேவையை நீக்குகிறது.
வாழை விவசாயிகளுக்கு உற்பத்தித்திறன் ,இலாபத்தை மேம்படுத்துவதையும் இலங்கையின் ஒட்டுமொத்த பழத் துறையை வலுப்படுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.