Tuesday, June 3, 2025 10:08 am
.
வடக்கு மாகாண பிரதம செயலாளராக பொறுப்பேற்ற தனுஜா முருகேசனை இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்ட துணைத் தூதரக அதிகாரிகள் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை செயலகத்தில் இன்றுசந்தித்து கலந்துரையாடினர்.
சந்திப்பின் போது, இந்தியாவின் ஆதரவுடன் நடைபெறும் வீடமைப்பு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி , வாழ்வாதாரத் திட்டங்களை அவர்கள் பரிசீலித்ததுடன், வர்த்தகம், வணிகம் மற்றும் திறனறிவு மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வழிகளையும் கலந்துரையாடினர்.
அத்துடன் நடந்து கொண்டிருக்கும் திட்டங்களை சீராக செயல்படுத்துவதற்கும், வடக்கு மாகாணத்தின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கான புதிய துறைகளை ஆராயும் பணி குறித்த செயல்பாடுகளையும், இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.