வடக்கு மாகாணத்தில் நிலவும் காணி பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அபிவிருத்தி திட்டங்களுக்காக காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடமாகாணத்தில் வசிப்பதாக வெளியான தகவல் தொடர்பில் ஆராய்ந்து துரித நடவடிக்கை எடுக்குமாறு இன்று நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற போது ஜனாதிபதி திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.