யாழ்ப்பாண மாவட்டத்தில் கடவுச் சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்நோக்கி வருகின்ற கடவுச் சீட்டுப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கான அலுவலகம் அமைப்பது தொடர்பில் மாவட்டச் செயலாளருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.