இராணுவம் கையகப்படுத்திய காணி இன்று உத்தியோக பூர்வமாக உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.
வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மாங்கொல்லையில் 15.13 ஏக்கர் வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டகப்புலம் கிராமத்தில் 20 ஏக்கர்ஒரு பகுதியும் இன்று(01 ) முதல் பொதுமக்களின் பாவணைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் காங்கேசன்துறை மேற்கில் தனியார் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.நாளை மறுதினம் உரிமையாளர்கள் தமது காணிகளை சென்று பார்வையிட்டு அடையாளப்படுத்தமுடியும்.
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்
ஜயகம்பத்,யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் பதில் ம.பிரதீபனிடம் கணியை முறைப்படி ஒப்படைத்தார்.
தெல்லிப்பளை ஜே/233 பகுதியில் 47 குடும்பங்களும்
வயாவிளான் பகுதியில் 55 குடும்பங் களும் தமது பூர்வீக நிலங்களுக்கு செல்லவுள்ளனர்
